எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்: பிஎஸ்எப் எஸ்.ஐ உயிரிழப்பு


எல்லையில் பாக். அத்துமீறி தாக்குதல்: பிஎஸ்எப் எஸ்.ஐ உயிரிழப்பு
x
தினத்தந்தி 13 Nov 2020 10:54 AM GMT (Updated: 13 Nov 2020 10:54 AM GMT)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த எஸ்.ஐ உயிரிழந்தார்.

ஸ்ரீநகர், 

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. எனினும்,பாகிஸ்தான் திருந்தியபாடில்லை. 

இந்த நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படையை சேர்ந்த துணை ஆய்வாளர் ராகேஷ் தோவல் காயம் அடைந்தார். 

தலையில் பலத்த காயம் அடைந்த  ராகேஷ் தோவல்  சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அதேபோல், ஜவான் ஒருவரும் காயம் அடைந்தார்.  பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் உயிரிழந்த எஸ். ஐ உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.  எல்லையில், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

Next Story