அயோத்தியில் களை கட்டிய தீபாவளி- சரயு நதிக்கரையில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது.
அயோத்தி,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்தது. சரயு நதி, ராஜ் மஹால் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கண்களைக் கவரும் வகையில், விதவிதமான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாய் காட்சி அளித்தன.
தீபாவளியையொட்டி அயோத்தி ராம ஜென்ம பூமியில் சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சரயு நதிக்கரையில் 5 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச ஆளுநர், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் உரையாற்றிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “ கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் கூட ராமர் கோவில் கட்டும் பணியை உறுதி செய்த பிரதமருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஆண்டு கொரோனா பெரும் சவாலை விடுத்துள்ளது” என்றார்.
Related Tags :
Next Story