நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 4 ஆயிரம் முறை எல்லையில் அத்துமீறிய பாக்.ராணுவம்


நடப்பு ஆண்டில் மட்டும்  சுமார் 4 ஆயிரம் முறை எல்லையில் அத்துமீறிய பாக்.ராணுவம்
x
தினத்தந்தி 13 Nov 2020 9:20 PM IST (Updated: 13 Nov 2020 9:20 PM IST)
t-max-icont-min-icon

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது

இஸ்லமாபாத்,

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்து 52 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. 

நடப்பு நவம்பர் மாதத்தில் மட்டும் 128 முறை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.  கடந்த ஆண்டு 3,233 முறை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

Next Story