குஜராத்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து


குஜராத்: பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 14 Nov 2020 12:07 PM GMT (Updated: 14 Nov 2020 12:07 PM GMT)

குஜராத் பிளாஸ்டிக் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி  ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீபாவளி விடுமுறையையொட்டி ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால், உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. எனினும் தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வரவில்லை.

Next Story