பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ்


பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்: அகிலேஷ் யாதவ்
x
தினத்தந்தி 14 Nov 2020 1:34 PM GMT (Updated: 14 Nov 2020 1:34 PM GMT)

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அகிலேஷ் யாதவ் கூறினார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 2022 -ஆம் ஆண்டு மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான சமாஜ்வாடி கட்சியின் யுக்திகள் தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது: - “ சிறிய கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசி வருகிறோம். ஆனால், எந்த ஒரு பெரிய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம்”என்றார். 

Next Story