காஷ்மீரில் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்- அதிகாரிகள் எச்சரிக்கை
ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை அடுத்த சில நாட்களுக்கு வாகன ஓட்டிகள் புறக்கணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருந்து வருகிறது.
இதன் காரணமாக, வடக்குக் காஷ்மீரின் குப்வாரா, பந்திப்போரா, பாரமுல்லா, மற்றும் வடக்குக் காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குப்வாரா மற்றும் பந்திப்போரா மாவட்டங்களுக்கு பலத்த பனிச்சரிவு அபாய எச்சரிக்கையும், கந்தெர்பால் மற்றும் பாரமுல்லாவுக்கு குறைந்த அளவிலான பனிச்சரிவு அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிச்சரிவு அபாயம் இருப்பதால் ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை அடுத்த சில நாட்களுக்கு வாகன ஓட்டிகள் புறக்கணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story