பீகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆர்ஜேடி புறக்கணிப்பு


பீகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆர்ஜேடி புறக்கணிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 10:47 AM GMT (Updated: 16 Nov 2020 10:47 AM GMT)

பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது.

பாட்னா, 

பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. 

இதில் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது. 

பீகார் முதல் மந்திரியாக இன்று மாலை நிதிஷ் குமார் பதவியேற்கிறார்.  ஆளுநர் மாளிகையில்  நடைபெறும் இந்த நிகழ்ச்சியை  புறக்கணிக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அக்கட்சியின்  டுவிட்டர் பதிவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story