உலகம் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்


உலகம் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது - பிரதமர் மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 16 Nov 2020 11:10 AM GMT (Updated: 16 Nov 2020 11:10 AM GMT)

உலகம் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது என்று, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜெயினாச்சார்யா விஜய் வல்லப் மகாராஜ்-ன் 151-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில்,  ' அமைதி சிலை'யை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேலின், உலகின் மிக உயர்ந்த ஒற்றுமை சிலையை அறிமுகப்படுத்த நாடு தனக்கு வாய்ப்பளித்தது எனது அதிர்ஷ்டம் என்று கூறினார். 

அதேபோல்,  ஜெயினாச்சார்யா விஜய் வல்லப் 'அமைதி சிலை' திறக்கும் பாக்கியத்தை இன்று பெற்று இருப்பதாகவும் மோடி கூறினார். ஆச்சார்யா விஜயவல்லப், பல கல்வி நிறுவனங்களை தொடங்கி கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்று கூறினார். 

மேலும் நமது நாடு, மனிதநேயம், அமைதி, அகிம்சை மற்றும் சகோதரத்துவத்தை வழங்கியதற்காக, உலகம் மீண்டும் இந்தியாவை நோக்கி வருகிறது என்று, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Next Story