அனைத்தும் நன்றாக உள்ளது என நினைக்கின்றனர்- காங். தலைமை குறித்து கபில் சிபல் விமர்சனம்
காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக மக்கள் நினைக்கவில்லை எனத் தெரிகிறது என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்தும் சில மூத்த தலைவர்களில் கபில் சிபலும் ஒருவர். பீகார் சட்டமன்ற தேர்தலிலும் மெகா கூட்டணி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்று கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கபில் சிபல் கூறியதாவது:
பீகார் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு மோசமாகத்தான் இருந்தது. காங்கிரஸ் கட்சியிடம் இருந்து இதுவரை எந்த கருத்தும் தேர்தல் தோல்வி குறித்து வரவில்லை. எல்லாம் சரியாகவே செல்கிறது என அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.
காங்கிரஸ் கட்சிக்குள் அமைப்புரீதியாக என்ன தவறு இருக்கிறது என்பதும் தெரியும். காங்கிரஸ் கட்சிக்கும் அனைத்துப் பதில்களும் தெரியும். ஆனால், அவர்கள் அதை ஏற்க விருப்பமில்லை. இயல்பில் உள்ள சூழலை அவர்கள் ஏற்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை இன்னும் மோசமாகும். பீகார் தேர்தல் முடிவைப் பார்த்தபின், இந்த தேசத்தின் மக்கள், காங்கிரஸ் கட்சியை வலுவான மாற்று சக்தியாக நினைக்கவில்லை எனத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story