பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை பங்கேற்பு


பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி நாளை பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Nov 2020 12:22 PM GMT (Updated: 16 Nov 2020 12:22 PM GMT)

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ரஷியா அதிபர் புதின் அழைப்பின் பேரில், நாளை காணொளி மூலம் நடைபெற உள்ள 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

மேலும் இந்த மாநாட்டில், கொரோனா தொற்று, உலகளாவிய முக்கிய பிரச்சினைகள் போன்றவற்றை குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.

நாளை நடைபெறும் 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டு அதிபா் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story