பிரித்தாளும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது; மெகபூபா முப்தி விமர்சனம்
மத்தியில் ஆளும் மோடி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாக மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
மத்தியில் ஆளும் மோடி அரசு பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாக மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார். மேலும், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவதுதான் மத்திய அரசின் கொள்கை எனவும் மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, குப்கார் அறிக்கைக்கான கூட்டமைப்பு பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், மெகபூபா முப்தி மேற்கண்டவாறு பதிலடி கொடுத்துள்ளார். சம்பித் பத்ரா கூறுகையில்,
“ பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடுகள் என்ன விரும்புகிறதோ அதையே குப்கார் கூட்டமைப்பும் விரும்புகிறது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மன்றங்களிலும் பாகிஸ்தான் கூறி வருகிறது. அதையேதான் குப்கார் கூட்டமைப்பும் வலியுறுத்துகிறது” எனக் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story