பசிக்கு மதமில்லை; ஏழைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இலவச மதிய உணவு வழங்கும் நபர்


பசிக்கு மதமில்லை; ஏழைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இலவச மதிய உணவு வழங்கும் நபர்
x
தினத்தந்தி 16 Nov 2020 8:41 PM GMT (Updated: 16 Nov 2020 8:41 PM GMT)

தெலுங்கானாவில் மத பேதமின்றி ஏழைகளுக்காக கடந்த 10 ஆண்டுகளாக நபர் ஒருவர் இலவச மதிய உணவு வழங்கி வருகிறார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் ஆசிப் உசைன் சோஹைல்.  இவர் தனது மறைந்த தந்தை மற்றும் மகளின் நினைவாக சகினா தொண்டு அமைப்பு ஒன்றை கடந்த 2010ம் ஆண்டு உருவாக்கினார்.

இந்த அமைப்பின் கீழ் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் என்ற வகையில் உணவு மற்றும் உணவு சமைக்க தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.

இதுபற்றி ஆசிப் கூறும்பொழுது, பசிக்கு எந்த மதமும் இல்லை.  குப்பை தொட்டியில் இருந்து மக்கள் உணவை எடுத்து, சாப்பிடும் அவல நிலையை நாம் காண்கிறோம்.  மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக நாங்கள் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் பிரசாரங்களை தொடங்கியுள்ளோம் என கூறுகிறார்.

நகரில் இலவச மதிய உணவு வழங்க பல்வேறு பகுதிகளிலும் அதற்காக சமையலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.  ஊரடங்கில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கும் பணியில் தன்னார்வலர்களாக 200 பணியாளர்கள் செயல்பட்டனர்.  இதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

Next Story