மருத்துவ அவசரநிலை: கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட ரியாத்-டெல்லி விமானம்


மருத்துவ அவசரநிலை: கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்ட ரியாத்-டெல்லி விமானம்
x
தினத்தந்தி 17 Nov 2020 4:49 PM GMT (Updated: 17 Nov 2020 4:49 PM GMT)

ரியாத்-டெல்லி விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,  

கோ ஏர் ரியாத்-டெல்லி விமானம் மருத்துவ அவசரநிலை காரணமாக இன்று கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. (பயணி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது). 

விமானம் கராச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தரையிறங்கிய பின்னர், விமான நிலைய மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தப் பயணி இறந்ததாக அறிவித்தனர். இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் போது பயணி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் காத்திருக்கின்றன.

Next Story