புத்துணர்வு தரும் செய்தி; கோவேக்சின் 2021ம் ஆண்டு 2ம் காலாண்டில் வெளிவரும்


புத்துணர்வு தரும் செய்தி; கோவேக்சின் 2021ம் ஆண்டு 2ம் காலாண்டில் வெளிவரும்
x
தினத்தந்தி 22 Nov 2020 10:33 AM GMT (Updated: 2020-11-22T16:03:17+05:30)

இந்தியாவில் தயாராகும் கொரோனா தடுப்பு மருந்து கோவேக்சின் குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும் என பாரத் பையோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளுக்கு சவாலாக உள்ள கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனமும் ஈடுபட்டு உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து கோவேக்சின் உருவாக்கப்பட்டு வருகிறது.  இந்த தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் கடந்த திங்கட்கிழமையில் இருந்து தொடங்கப்பட்டு விட்டன.

இதனை தொடர்ந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் தரத்திற்கான செயல் தலைவர் சாய் பிரசாத் இன்று கூறும்பொழுது, உலக சுகாதார அமைப்பு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மற்றும் இந்தியாவின் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை தடுப்பு மருந்துகள் கொரோனா வைரசுக்கு எதிரான பணியில் 50 சதவீதம் பூர்த்தி செய்து விட்டாலே அவற்றுக்கு ஒப்புதல் வழங்குகின்றன.

கோவேக்சின் தடுப்பு மருந்து குறைந்தது 60 சதவீதம் வெற்றிகரமானதாக இருக்கும்.  அதற்கு கூடுதலாகவும் சிறப்புடன் செயல்பட முடியும் என கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து, கோவேக்சின் தடுப்பு மருந்து வருகிற 2021ம் ஆண்டின் 2ம் காலாண்டில் வெளியிட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story