உலகின் சிறந்த நகரங்கள் 2021; டெல்லிக்கு 62வது இடம்


உலகின் சிறந்த நகரங்கள் 2021; டெல்லிக்கு 62வது இடம்
x
தினத்தந்தி 22 Nov 2020 3:56 PM GMT (Updated: 22 Nov 2020 3:56 PM GMT)

இந்தியாவின் டெல்லி நகரம் 2021ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் 62வது இடம் பிடித்துள்ளது.

புதுடெல்லி,

2021ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நகரங்கள் கொண்ட பட்டியலில் டெல்லி 62வது இடம் பிடித்துள்ளது.  உலகம் முழுவதிலும் சிறந்த 100 நகரங்களில் இடம் பிடித்த ஒரே இந்திய நகரமும் டெல்லி ஆகும்.

கடந்த ஆண்டு இந்த பட்டியலில் டெல்லி 81வது இடத்தில் இருந்தது.  இந்த ஆண்டு அதன் தரவரிசை முன்னேற்றம் அடைந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

டெல்லி தவிர்த்து இந்த பட்டியலில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் டி.சி. உள்ளிட்ட நகரங்களும், இத்தாலியின் ரோம் நகரமும், அபுதாபி, செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், பிரேக், டொரோண்டோ போன்ற நகரங்ளும் இடம் பெற்று உள்ளன.

உலகம் முழுவதுமுள்ள சிறந்த நகரங்களின் தரவரிசையானது, இடத்தின் தரம், நற்பெயர் மற்றும் முக்கியத்துவம் பெற்ற அதிக திறமையானவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக தலைவர்கள் உள்ளிட்ட மக்களின் உணர்வுகளின் அடிப்படையிலான போட்டிக்கான அடையாளம் கொண்ட உலகளாவிய நகரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் லண்டன், நியூயார்க், பாரீஸ், மாஸ்கோ மற்றும் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

Next Story