மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு? அஜித் பவார் பதில்


மராட்டியத்தில் மீண்டும் ஊரடங்கு? அஜித் பவார் பதில்
x
தினத்தந்தி 22 Nov 2020 4:55 PM GMT (Updated: 22 Nov 2020 4:55 PM GMT)

மராட்டியத்தில் 8, 10 நாட்களில் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மும்பை,

உலகின் பல நாடுகளுக்குக் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க, உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக, மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் மராட்டியத்தில் 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு,  மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்-மந்திரி அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி புனேவில் அவர் கூறியதாவது:-

"தீபாவளி சமயத்தில் பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நேரத்தில் கூட பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த 8, 10 நாட்களில் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும்.

தற்போது கொரோனா 2-ம் அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது என்றார்.

Next Story