டெல்லியில் கொரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஏன்? சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்


டெல்லியில் கொரோனா உயிரிழப்பு விகிதம் அதிகமாக இருப்பது ஏன்? சுகாதாரத்துறை மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 23 Nov 2020 6:39 PM GMT (Updated: 23 Nov 2020 6:39 PM GMT)

டெல்லியில் கடந்த 12 தினங்களாக தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை 100- ஐ தாண்டியே பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் காற்று மாசு டெல்லிக்கு  பெரும் பிரச்சினையாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் கடும் சிரமத்தை காற்று மாசு ஏற்படுத்துகிறது. தீவிர பாதிப்பும் இதனால் ஏற்படுகிறது. 

பயிர்க்கழிவுகளை எரிப்பதனால் ஏற்பட்ட காற்று மாசு தற்போது குறைந்துள்ளது. இதனால், அடுத்த சில வாரங்களில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறையத்தொடங்கும்.” என்றார். டெல்லியில் கடந்த 12 தினங்களாக தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை 100- ஐ தாண்டியே பதிவாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story