மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை


மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று  ஆலோசனை
x
தினத்தந்தி 23 Nov 2020 9:18 PM GMT (Updated: 2020-11-24T02:48:42+05:30)

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சில மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் மக்களின் வாழ்வாதாரத்துக்காக படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்தில் சென்னையில் கொரோனா பரவல் உச்சநிலையை எட்டியிருந்தது. பின்னர் பல்வேறு நடவடிக்கைகளால், சென்னையில் தொற்று குறைந்து கட்டுக்குள் உள்ளது.

தமிழகத்தில் முககவசம் அணியாமல் இருப்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலை பற்றிய தகவல்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு உத்தரவின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு முன்பு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதியிலும் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். அவர் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணி அளவில் நடக்க உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அப்போது தமிழகத்துக்கு தேவையான கோரிக்கைகளை பிரதமரிடம் அவர் எடுத்துரைப்பார். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றின் தற்போதைய நிலை, அதற் காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தயார் நிலை, கொரோனா மேலாண்மை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.


Next Story