நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம்


நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம்
x
தினத்தந்தி 24 Nov 2020 5:50 AM IST (Updated: 24 Nov 2020 5:50 AM IST)
t-max-icont-min-icon

நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை (புதன்கிழமை) கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த புயல் மீட்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் (என்.டி.ஆர்.எப்.) இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையான வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில் 12 குழுக்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். 18 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்கள்.

இந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என என்.டி.ஆர்.எப். வட்டாரங்கள் தெரிவித்தன.
1 More update

Next Story