நிவர் புயலை முன்னிட்டு ஐ.டி.ஐ. தேர்வுகள் ஒத்திவைப்பு


நிவர் புயலை முன்னிட்டு ஐ.டி.ஐ. தேர்வுகள் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 24 Nov 2020 4:32 PM GMT (Updated: 24 Nov 2020 5:04 PM GMT)

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.

புதுச்சேரி,

வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரியில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.  நாளை மறுநாள் காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இதேபோன்று, காரைக்கால் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் வியாழன் காலை வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

நிவர் புயல் அச்சுறுத்தல் எதிரொலியாக, நாளை முதல் வரும் 27ந்தேதி வரை நடைபெறவிருந்த ஐ.டி.ஐ. தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.  அதற்கு பதிலாக டிசம்பர் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Next Story