டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை


டெல்லி தனியார் மருத்துவமனைகளில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 1 Dec 2020 2:06 AM IST (Updated: 1 Dec 2020 2:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகளுக்கான விலை ரூ.800-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

தலைநகர் டெல்லியில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பரிசோதனைகளும் அதிகரிக்கப்படுகின்றன. நோய்த்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலையில், நேற்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மக்களின் வசதிக்காக கொரோனா பரிசோதனை கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் ரூ.2 ஆயிரத்து 400-க்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் முதல்-மந்திரி உத்தரவின்படி இனிமேல் ரூ.800-க்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். குறைக்கப்பட்ட இந்த கட்டணம் குறித்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களின் முன் விளம்பர பலகை வைக்கவும் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story