தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,930 பேருக்கு தொற்று உறுதி + "||" + Maharashtra sees 4,930 new Covid-19 cases, 6,290 recoveries; 95 die

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,930 பேருக்கு தொற்று உறுதி

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,930 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.91 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
மும்பை, 

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் சமீபகாலமாக நோயின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. ஆனால் சமீப நாட்களாக மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மராட்டியத்தில் 4 ஆயிரத்து 930 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 லட்சத்து 28 ஆயிரத்து 826 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று புதிதாக 6 ஆயிரத்து 290 பேர் குணமடைந்து உள்ளனா். இதுவரை மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 91 ஆயிரத்து 412 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மராட்டியத்தில் 89 ஆயிரத்து 098 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மாநிலத்தில் இன்று புதிதாக 95 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47,246 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பால் 5,38,084 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 7,863 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 7,863 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று மேலும் 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் மேலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 8,702 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று புதிதாக 8,702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. மராட்டியத்தில் மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் இன்று 8,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.