தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு + "||" + Pfizer says 'committed to engaging with Indian govt to make vaccine available in country'

இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு

இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு
இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

உலகை இன்றளவும் அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசை தடுப்பதற்கு அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக கூறப்படுகிற இந்த தடுப்பூசியை,, உலகிலேயே முதல்நாடாக இங்கிலாந்தில் பயன்படுத்துவதற்கு அங்குள்ள அரசு ஒப்பதலை வழங்கி உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச்செய்வதற்கான வாய்ப்பு வசதிகள் குறித்து மத்திய அரசுடன் பைசர் நிறுவனம் பேச்சு நடத்த இருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், “இப்போது நாங்கள் உலகமெங்கும் உள்ள பல அரசுகளுடன் பேசி வருகிறோம். இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை கிடைக்கச்செய்வதற்கான வாய்ப்புகளை கண்டறிவதற்கு இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், “இந்த பெருந்தொற்று காலத்தில் பைசர் தனது தடுப்பூசியை அரசு ஒப்பந்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை அங்கீ காரம் மற்றும் ஒப்புதல் அடிப்படையில் மட்டுமே வழங்கும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் மீண்டும் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே 9-வது சுற்று பேச்சுவார்த்தை; லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை
ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
3. இந்தியா முழுவதும் 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம்
இந்தியா முழுவதும் இதுவரை 15,82,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4. இந்தியாவில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்வு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியா- சீனா இடையே இன்று ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை
இந்தியா- சீனா இடையே ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை இன்று நடக்க உள்ளது