உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பலி
உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் நேற்று விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் உள்ள புதோதரா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் தனேந்திரா, அங்குள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மதியம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்க 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவன் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை.
சிறுவன் தனேந்திரா
இதற்கிடையே மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காலை 9 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டான். உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story