தேசிய செய்திகள்

2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு + "||" + Punjab CM Amarinder Singh announces 5 lakh each to families of 2 farmers

2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு

2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி - பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவிப்பு
போராட்டத்தில் மரணம் அடைந்த 2 விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.
சண்டிகர், 

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

இதில் பங்கேற்ற பஞ்சாப் விவசாயி குர்ஜன்சிங் என்பவர் மரணம் அடைந்தார். இதேபோல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி குர்பசன் சிங் (வயது 80) என்பவரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

2 விவசாயிகளின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரிந்தர் சிங், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.