ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் வெற்றி யாருக்கு ?
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் (டிஆர்எஸ்), பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் (டிஆர்எஸ்), பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஆரம்பத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. 11 மணி நிலவரப்படி பாஜக 88 வார்டுகளிலும், டிஆர்எஸ் 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எஐஎம்ஐஎம் கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது.
ஆனால் மதியம் 2 மணிக்கு மேல் தெலுங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி 36 வார்டுகளில் வெற்றி பெற்றது. 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 30 வெற்றி; 14 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது. ஏஐஎம்ஐஎம் 31 வார்டுகளில் வெற்றி; 12 வார்டுகளில் முன்னிலை வகிக்கிறது.
Related Tags :
Next Story