மராட்டியத்தில் புதிதாக 5,229- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் புதிதாக 5,229- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Dec 2020 8:38 PM IST (Updated: 4 Dec 2020 8:38 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று புதிதாக 5,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று 5,229 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 83 ஆயிரத்து 859 பேர்  தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரேநாளில் 127 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 6,776 பேர் குணமடைந்தனர்.

இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 10 ஆயிரத்து 050ஆக உயர்ந்துள்ளது.

Next Story