ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்; இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது பாஜக


PTI Photo (FILE)
x
PTI Photo (FILE)
தினத்தந்தி 4 Dec 2020 8:52 PM IST (Updated: 4 Dec 2020 8:52 PM IST)
t-max-icont-min-icon

ஐதரபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜக 45 இடங்களில் வென்று 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஐதராபாத்,

 ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. மொத்தமுள்ள 150 இடங்களுக்கும் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் 56  இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 75 இடங்களை பெற முடியவில்லை. கடந்த தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்ற அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாஜக 49 இடங்களை பெற்றுள்ளது. கடந்த முறை தெலுங்குதேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெறும் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.  ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்.ஐஎம் கட்சி 43 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

Next Story