மராட்டியத்தில் மேலும் 4,922- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மராட்டிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்து 47 ஆயிரத்து 509-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 82 ஆயிரத்து 849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்படடு 5,834 பேர் புதிதாக குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 15 ஆயிரத்து 884-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 95 பேர் பலியாகியுள்ளனர்.
Related Tags :
Next Story