விவசாயிகள் பாரத் பந்த் அறிவிப்புக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு
விவசாயிகள் பாரத் பந்த் அறிவிப்புக்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக விவசாயிகள் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில் வரும் 8-ஆம் தேதி பாரத் பந்த்திற்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆம் ஆத்மி அரசு ஆதரவளிப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இந்தியா விவசாய நாடு என்றும், இதனால் நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story