ராஜஸ்தான் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 9 Dec 2020 5:26 PM IST (Updated: 9 Dec 2020 5:26 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியிலும் ராஜஸ்தான் மாவட்ட கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

ஜெய்ப்பூர் :

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 636 இடங்களுக்கான மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றன.

இந்த தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, மொத்தம் 14 மாவட்டங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தி உள்ளது. அதேசமயம் காங்கிரஸ் ஐந்து மாவட்டங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகளின்படி பா.ஜனதா  326 இடங்களிலும், காங்கிரஸ் 250 இடங்களிலும் வென்றுள்ளது. 
பஞ்சாயத்து சமிதி தேர்தலில் மொத்தமுள்ள 4,371 இடங்களில் பா.ஜனதா 1,836 இடங்களையும், காங்கிரஸ் 1,718 இடங்களையும் வென்றுள்ளது.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல்  மற்றும் பஞ்சாயத்து சமிதி தேர்தல்களின் போது தனது கட்சி மீது நம்பிக்கை வைத்ததற்காக ராஜஸ்தான் மக்களுக்கு பா. ஜனதா தலைவர் ஜே.பி.நடா  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "ராஜஸ்தானில்  மாவட்ட கவுன்சில் உறுப்பினர்களுக்கான தேர்தல் மற்றும் பஞ்சாயத்து சமிதி  தேர்தல்களில் பா.ஜனதா மீது நம்பிக்கை கொண்ட மாநிலத்தின் கிராமப்புற மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த வெற்றி கிராமத்தின் நம்பிக்கை, ஏழை, விவசாயி பிரதமர் நரேந்திரமோடி மீது  உள்ள  நம்பிக்கையின் அடையாளமாகும் என கூறி உள்ளார்.


Next Story