முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; எதிர்க்கட்சியினர் கூட்டாக பேட்டி


முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; எதிர்க்கட்சியினர் கூட்டாக பேட்டி
x
தினத்தந்தி 9 Dec 2020 5:45 PM IST (Updated: 9 Dec 2020 5:45 PM IST)
t-max-icont-min-icon

முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என எதிர்க்கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் தெரிவித்தனர்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற  வலியுறுத்தி  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் ராகுல்காந்தி, சரத்பவார், டி.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு கூட்டாக எதிர்க்கட்சியினர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:   விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் திரும்பப் பெறுவது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தோம்.  முறையான விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

வேளாண் மசோதா குறித்து ஆழமான விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் கோரினோம். இந்த மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டோம். ஆனால், எங்களின் எந்த பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவசர கதியில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன” என்றனர். 


Next Story