மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் கார் தாக்குதலில் 7 பேர் கைது


(PTI photos)
x
(PTI photos)
தினத்தந்தி 12 Dec 2020 3:36 AM IST (Updated: 12 Dec 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் கார் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொல்கத்தாவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில், பயணம் மேற்கொண்ட பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, கடந்த வியாழக்கிழமையன்று டைமண்ட் ஹார்பருக்கு காரில் சென்றார். அப்போது அவர் காருக்கு முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. அவற்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் தாமாக முன்வந்து இந்திய தண்டனைச்சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொல்கத்தாவில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 4 பேர் பால்டாவிலும், 3 பேர் உஸ்தி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Next Story