டெல்லி போராட்டத்தில் இதுவரை 11 பேர் பலி:இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்?- ராகுல் காந்தி கேள்வி


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 12 Dec 2020 5:27 PM IST (Updated: 12 Dec 2020 5:27 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி போராட்டத்தில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ள செய்தியை சுட்டிக்காட்டி இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டம் இன்று 17–வது எட்டியது.

இந்த போராட்டத்தில் இதுவரை 11 விவசாயிகள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று இணைத்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதற்காக இன்னும் எத்தனை விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும்?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதேபோன்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘17 நாட்களில் 11 விவசாயி சகோதரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். மோடி அரசு பின்வாங்கவில்லை. அவர்கள் இன்னும் தங்களுக்கு பணம் தருவோருடன் உள்ளனரே தவிர உணவு தருவோருடன் நிற்கவில்லை. இதுதான் ராஜ தர்மமா?’’ என கேட்டுள்ளார்.


Next Story