மராட்டியத்தில் மேலும் 4,259- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் மேலும் 4,259- பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் புதிதாக 4,259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18 லட்சத்து 76 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 80 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 48,139 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் தொற்று பாதிப்பில் இருந்து 3,949 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 73 ஆயிரத்து 542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 93.46 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.57 சதவிகிதமாக உள்ளது.
Related Tags :
Next Story