சினிமாவுக்கு, தொழில் துறை அந்தஸ்து வழங்க திட்டம் - மந்திரி அமித் தேஷ்முக் தகவல்
சினிமா துறைக்கு, தெழில்துறை அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மந்திரி அமித் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை,
உத்தர பிரதேச மாநிலத்தில் சினிமா துறையினருக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க சமீபத்தில் அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மும்பை கோரேகாவ் பிலிம்சிட்டியை பார்வையிட்டார். மேலும் அவர் இதுதொடர்பாக சினிமா துறையினரை சந்தித்து பேசினார்.
இதனால் இந்தி திரைப்பட தொழில் மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு இடமாறும் வாய்ப்பு இருப்பதாக சலசலப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மராட்டியத்தில் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு, தொழில்துறை அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கலாச்சார துறை மந்திரி அமித் தேஷ்முக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறை விரிவடைந்து வேலைவாய்ப்பையும், சுய வேலை வாய்ப்பையும் உருவாக்கி வருகிறது. இதை கருத்தில் கொண்டு, சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் மந்திரி சபை கூட்டத்தில் விரைவில் வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story