”விவசாயிகள் போராட்டங்கள் குறித்து கருத்து” இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்


”விவசாயிகள் போராட்டங்கள் குறித்து கருத்து” இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 14 Dec 2020 8:05 AM IST (Updated: 14 Dec 2020 8:05 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் சாக்கில் இந்திய விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறது பாகிஸ்தான்

புதுடெல்லி: 

இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் மீண்டும் மூக்கை நுழைத்து உள்ளது.  இந்தியாவின் உள் விவகாரங்களில் பாகிஸ்தான் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் அடிக்கடி ஏதாவது கருத்தை கூறுவார்கள்.

கடந்த வியாழக்கிழமை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த பிராந்தியத்தில் ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இந்தியாவை முரட்டு நாடு என்று அழைத்த அவர், இந்தியா  உலக அமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக மாறி உள்ளது என  குற்றம் சாட்டினார்.

3  வேளாண்  சட்டங்கள் தொடர்பாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் இன்று 20 வது நாளாக  போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இன்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி. விவசாய சட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்களை தூண்ட முயற்சி செய்து உள்ளார்.

இந்தியாவின் நிலைமை காரணமாக உலகம் முழுவதும் பஞ்சாபியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த முட்டாள்தனங்களுக்கு பலியாகிறார்கள் என பவாத் சவுத்ரி கூறி உள்ளார்.

பவாத்  சவுத்ரி தனது டுவிட்டரில் கூறி உள்ளதாவது:-

இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள்   குறித்து உலகம் முழுவதும் உள்ள பஞ்சாபியர்கள் வேதனையில் உள்ளனர். பஞ்சாபியர்கள் தங்கள் இரத்தத்தை சுதந்திரத்திற்கு  விலையாக கொடுத்து உள்ளனர். பஞ்சாபியர்கள் தங்கள் சொந்த முட்டாள்தனங்களுக்கு பலியாகிறார்கள் என கூறி உள்ளார்.



Next Story