பீகாரில் முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி


பீகாரில் முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 14 Dec 2020 8:37 PM IST (Updated: 14 Dec 2020 8:37 PM IST)
t-max-icont-min-icon

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி ஜிதன்ராம் மஞ்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

பாட்னா,

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரியும், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜிதன்ராம் மஞ்சிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதை டுவிட்டரில் தெரிவித்துள்ள ஜிதன்ராம் மஞ்சி, தன்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.

பீகாரில் முன்னாள் துணை முதல்–மந்திரி சுஷில்குமார் மோடி, சுகாதார மந்திரி மங்கள் பாண்டே உள்ளிட்ட தலைவர்கள் முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story