பொருளாதாரத்தில் நாடு துரிதமாக மீண்டெழுந்தது - ராஜ்நாத் சிங்
பொருளாதாரம் சீரடைய ஒரிரு வருடங்களுக்கும் அதிகமாக ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், நாடு துரிதமாக மீண்டெழுந்தது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பின் 93-வது வருடாந்திர மாநாட்டில் மத்திய பாதுகாப்புதுறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்சார்பு இந்தியா இயக்கம் இந்தியப் பொருளாதார வரலாற்றின் திருப்புமுனை தருணம். கொரோனா பெருந்தொற்றின் போது உயிர்களைப் பாதுகாக்க தலையாய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உயிரிழப்புகளைக் குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவ சமுதாயம் எடுத்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் சீரடைய ஒரிரு வருடங்களுக்கும் அதிகமாக ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், நாடு துரிதமாக மீண்டெழுந்தது. இது வரை இல்லாத வகையில் 35.73 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நேரடி வெளிநாட்டு முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது என்றார்.
அதனை தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு நாங்கள் பலியாகிவிட்டோம். எங்களை ஆதரிக்க யாரும் இல்லாதபோது கூட தனியாக வேதனைக்குள்ளாகிவிட்டோம். பின்னர், பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நீரூற்று என்று நாங்கள் சொல்வது சரிதான் என்று உலகநாடுகள் புரிந்து கொண்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story