முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர் கொள்ள தயார் - பிபின் ராவத்


முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர் கொள்ள தயார்  -  பிபின் ராவத்
x
தினத்தந்தி 14 Dec 2020 6:11 PM GMT (Updated: 14 Dec 2020 6:11 PM GMT)

நாட்டின் வடக்கு எல்லையில் எந்த அச்சுறுத்தலையில் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்ந்து தயாராகி வரும் நிலையில் நாம் எதிர்கொள்ளக்கூடிய எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

லடாக் எல்லையில் இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் எல்லைகளை காக்க முழு உரிமை உள்ளது. முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது என்றார். 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் என்றார். வடக்கு எல்லையில் எந்த சவாலையும் ராணுவம் எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story