உலகளாவிய ஒத்துழைப்பு கொரோனாவுக்கு ஒரே தீர்வு; ஐ.நா.வில் இந்தியா கருத்து


உலகளாவிய ஒத்துழைப்பு கொரோனாவுக்கு ஒரே தீர்வு; ஐ.நா.வில் இந்தியா கருத்து
x
தினத்தந்தி 16 Dec 2020 3:36 AM IST (Updated: 16 Dec 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

உலகாளவிய ஒத்துழைப்பு மட்டுமே கொரோனாவுக்கு ஒரே தீர்வு என ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா தெரிவித்துள்ளது.

நியூயார்க், 

கொரோனா வைரஸ் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் விகாஸ் ஸ்வரூப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் பல தரப்பு அமைப்புகளின் நிர்வாக கட்டமைப்புகளில் உள்ள இடைவெளிகளை நீர்த்துப் போகச் செய்துள்ளது.

சீர்திருத்த பன்முகத்தன்மையை நம் வழிகாட்டும் கொள்கையாக மாற்றுவது முக்கியம். தொற்றுநோயை கையாள்வதற்கு தலைமை, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை காட்ட நாம் கைகோர்க்க வேண்டியது அவசியம். நாம் ஒத்துழைப்பால் சிறந்த முறையில் பதிலளிக்க முடியும். 

தொற்று நோய்க்கு எதிராக இந்தியா சரியான நேரத்தில் அதே சமயம் செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை எடுத்தது. நாட்டின் நடவடிக்கைகள் அதன் பெரும் மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக மட்டுமல்லாமல் பொருளாதாரத்துக்கு குறைந்தபட்ச சேதம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story