இந்தியாவில் புதிதாக 26 ஆயிரம் பேருக்கு கொரோனா: 33 ஆயிரம் குணம் அடைந்தனர்


இந்தியாவில் புதிதாக 26 ஆயிரம் பேருக்கு கொரோனா: 33 ஆயிரம் குணம் அடைந்தனர்
x
தினத்தந்தி 16 Dec 2020 4:57 AM GMT (Updated: 16 Dec 2020 4:57 AM GMT)

இந்தியாவில் புதிதாக 26 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. 33 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் இன்னும் உலகின் பல நாடுகளையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. ஆனாலும் இந்தியாவில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நமது நாட்டில் புதிதாக 26 ஆயிரத்து 382 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை என்பது 99 லட்சத்து 32 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு புதிதாக ஆளாகிறவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், அந்த வைரஸ் தொற்றில் இருந்து சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கும் அம்சம் ஆகும்.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 813 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருக்கிறார்கள்.  இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94,56,449 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவுக்கான சிகிச்சை பலன் அளிக்காமல் 387 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 096 ஆக அதிகரித்து உள்ளது.

நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 3 லட்சத்து 32 ஆயிரத்து 002 ஆகும்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 95.21% உயிரிழப்பு விகிதம் 1.45% ஆக உள்ளது.

Next Story