டெல்லி அரசின் கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தயார் - உ.பி. அமைச்சர்களுக்கு சிசோடியா சவால்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Dec 2020 9:00 AM GMT (Updated: 2020-12-16T14:36:24+05:30)

டெல்லி அரசின் கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தயார் என்று உ.பி. அமைச்சர்களுக்கு துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லி, 

டெல்லி அரசின் கல்வி கொள்கை குறித்து விவாதிக்க தயார் என்று உத்திரபிரதேச அமைச்சர்களுக்கு டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா சவால் விடுத்துள்ளார். 

மேலும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இரு மாநில அரசுகளும் மேற்கொண்டுள்ள முன்னேற்றம் குறித்து விவாதிக்க டிசம்பர் 22 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்னோவுக்கு வருவதாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்-மந்திரி சிசோடியா ஆகியோரை உத்தரபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் செல்லுமாறு உத்திரபிரதேச அடிப்படை கல்வி அமைச்சர் சதீஷ் திவிவேதி அழைத்ததை அடுத்து சிசோடியா இவ்வாறு அறிக்கை விடுத்துள்ளார்.

கல்வி வசதிகளின் முன்னேற்றம் குறித்து டெல்லிக்கும், உத்தரபிரதேசத்திற்கும் இடையில் ஒப்பீடுகளை கெஜ்ரிவால் மேற்கொண்டதை அடுத்து, திவிவேதி அவர்களை உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். 

முன்னதாக 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Next Story