ஜே.இ.இ. தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு


ஜே.இ.இ. தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2020 9:51 PM IST (Updated: 16 Dec 2020 9:51 PM IST)
t-max-icont-min-icon

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஜே.இ.இ. தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ. (JEE) தேர்வுகள், அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு 4 முறை நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்திருந்தார். அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜே.இ.இ தேர்வுகள் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பான விவரங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கைகளை ஏற்று தேர்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

முதற்கட்டமாக பிப்ரவரி 23-26 வரை தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்றும் மாணவ-மாணவிகள் தங்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story