கேரளாவில் மேலும் 6,185- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 185- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பாதிப்பு கணிசமாக அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,185- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து அங்கு ஒரே நாளில் 5,728 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் 58,184- பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 22 ஆயிரத்து 394- ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தொற்று பாதிப்பால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 704- ஆக உள்ளது.
Related Tags :
Next Story