1964 க்கு பிறகு அலிகார் முஸ்லீம் பலக்லைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி


1964 க்கு பிறகு அலிகார் முஸ்லீம் பலக்லைக்கழக நிகழ்ச்சியில்  கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 17 Dec 2020 6:20 AM GMT (Updated: 17 Dec 2020 6:20 AM GMT)

1964 க்கு பிறகு அலிகார் முஸ்லீம் பலக்லைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

ஆக்ரா: 

நாட்டின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் தனது 100 வது  ஆண்டு விழாவை கொண்டாடுகிறது.டிசம்பர் 22   ந்தேதி நடைபெறும் இந்த கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி  முதன்மை விருந்தினராக  கலந்து கொள்கிறார்.

1964 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கலந்து கொண்டார். அதன் பின் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

டிசம்பர் 22 ஆம் தேதி பிரதமரின்  பயணத்திட்டம் குறித்து  தகவல் வெளியாக வில்லை  ஆனால் பிரதமர் புதிதாக கட்டப்பட்ட வளாக நினைவு வாயிலைத் திறந்து வைக்கலாம் மேலும் ஒரு அஞ்சல் முத்திரை மற்றும் நினைவு காபி டேபிள் புத்தகத்தை வெளியிடலாம் என கூறப்படுகிறது.

முகம்மது ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரி 1875 ஆம் ஆண்டில் சர் சையத் அகமது கான் அவர்களால் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜில் பார்த்ததைப் போல அமைக்கப்பட்டது. 1920 ஆம் ஆண்டில், இது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது மற்றும் டிசம்பர் 17 அன்று மகமுதாபாத்தின் ராஜா சாஹேப் வி.சி. முகமது அலி முகமது கான் என்பவரால் முறையாக ஒரு பல்கலைக்கழகமாக திறக்கப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தர் தாரிக் மன்சூர் கூறியதாவது:-

"எந்தவொரு நிறுவனத்தின்  வரலாற்றிலும் ஒரு நூற்றாண்டு விழா ஒரு முக்கிய அடையாளமாகும் ... எங்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முழு  சமூகமும், நானும் பிரதமருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த வரலாற்று நிகழ்வில் பிரதமர் இருப்பது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும்  எங்கள் மாணவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்கும் கலந்து கொள்ளவுள்ளார் என்று துணைவேந்தர் தாரிக் மன்சூர் கூறி உள்ளார்.

Next Story