இந்தியாவில் 1 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 1 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2020 4:33 AM GMT (Updated: 18 Dec 2020 4:33 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி,

பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது. இங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்து உள்ளன. 

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 22,890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்தியா இதுவரை 99 லட்சத்து 79 ஆயிரத்து 447 கொரோனா பாதிப்பை பெற்றிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 338 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இது மொத்த சாவு எண்ணிக்கையை 1 லட்சத்து 44 ஆயிரத்து 789  ஆக உயர்த்தி இருக்கிறது.

அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 087 பேர் குணமடைந்திருக்கின்றனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது.

இன்று  காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் இவ்வாறு 4 லட்சத்துக்கு குறைவான நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 12 நாட்களாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் படி டிசம்பா் 17-ஆம் தேதி வரை 15,89,18,646 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11,13,406 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Next Story