நேபாளம் சீனாவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் - இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி


நேபாளம் சீனாவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் - இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி
x
தினத்தந்தி 18 Dec 2020 5:19 AM GMT (Updated: 18 Dec 2020 5:19 AM GMT)

நேபாளம் சீனாவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறினார்.

புதுடெல்லி

சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டிற்கான நேபாள இன்ஸ்டிடியூட் மற்றும்  டெல்லி  நிலப் போர் ஆய்வுகள் மையம் இணைந்து   நடத்திய நிகழ்ச்சியில் கலந்து உரையாடிய
இந்திய பாதுகாப்பு தலைமை தளபதி  ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது:-

இந்தியாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான "தனித்துவமான, ஆழமான மற்றும் விரிவான" உறவுகள் பல நூற்றாண்டுகளாக கட்டமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச விவகாரங்களில் நேபாளம் தனது தேர்வுகளை சுதந்திரமாக செய்கிறது.  ஆனால் அது விழிப்புடன் இருக்க வேண்டும். இலங்கை மற்றும் பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட  சில நிகழ்வுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் சீனா பல ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை கடனில் சிக்கவைத்து உள்ளது.சீனா, அதன் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் நேபாளத்திற்குள் பிற மூலோபாய ஊடுருவல்கள்  மூலம் இந்திய நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக இந்தியா கவலை கொண்டுள்ளது.

ஏற்கனவே பிரிக்க முடியாத இரு நாடுகளின் மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக  இந்தியாவும் நேபாளமும் தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என கூறினார். 

Next Story