ராகுல் காந்தி மீண்டும் தலைவராக 99.9 % தொண்டர்கள் விருப்பம்: காங். மூத்த தலைவர்
சோனியா காந்தி நாளை முதல் அடுத்த 10 தினங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,
மக்களவை சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததால், அக்கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார்.
சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதன் நடைமுறைகளில் ஒன்றாக சோனியா காந்தி நாளை முதல் அடுத்த 10 தினங்களுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், உறுப்பினர்கள் சிறந்த தலைவரை தேர்வு செய்வார்கள். நான் உள்பட 99.9 சதவீதம் பேர் ராகுல் காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story