பீகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு


பீகாரில் 2021 ஜனவரி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 18 Dec 2020 10:20 PM IST (Updated: 18 Dec 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

பீகாரில் 2021 ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில தலைமை செயலர் தீபக் குமார் தெரிவித்துள்ளார்.

பாட்னா,

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் முடிவு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில், அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளும், கல்லூரிகளின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதர வகுப்புகளைத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.


Next Story